Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அப்படி ஒரு விஷயம் நடக்கும் என 20 வருடத்திற்கு முன்பே கூறிய அஜித் - வியக்கும் தேவயானி

அஜித் தமிழ் சினிமாவே கொண்டாடும் ஒரு நடிகர். நாயகன் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை உடைத்து தனக்கென்று ஒரு ஸ்டைல் தொடங்கி இப்போது அதை பலபேராலும் தைரியமாக செய்ய வைத்தவர், குறிப்பாக சால்ட் அன் பெப்பர் லுக்.

இப்போது விஸ்வாசம் படத்தின் வேலைகளில் படு பிஸியாக இருக்கிறார். 90களில் கலக்கிய நடிகை தேவயானி எழுமின் என்ற படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.

அதில் ஒரு பேட்டியில், அஜித் ரொம்ப இயல்பான, அழகான மனிதர். ரேஸிங்கில் அப்போதே அவருக்கு ஆர்வம் அதிகம், அதைப்பற்றி எல்லாம் என்னிடம் அதிகம் பேசுவார். அன்றே அஜித், நான் கண்டிப்பாக பெரிய ஆளாக வருவேன் என்றார், இப்போது அது நடந்திருக்கிறது என்று மகிழ்ச்சியாக பேசியுள்ளார்.