Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வசூலில் விஜய், அஜித்தை பின்னுக்கு தள்ளிய விஷால், உண்மை தகவல் இதோ

விஷால் தமிழ் சினிமாவில் உச்சத்தை நோக்கி வளர்ந்து வரும் நடிகர். இவர் நடிப்பில் கடந்த வாரம் சண்டக்கோழி-2 படம் திரைக்கு வந்தது.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை தான் பெற்று வருகின்றது, அப்படியிருந்தும் தென் தமிழகத்தில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது.

விஷாலுக்கு தமிழகத்தில் மார்க்கெட் எப்படியோ ஆனால், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வேற லெவல் தான்.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால் விஜய், அஜித்திற்கு கூட ஆந்திராவில் அவ்வளவு மார்க்கெட் இல்லை.

இந்நிலையில் விஷால் சண்டக்கோழி-2 தெலுங்கில் ரூ 11 கோடி வரை வசூல் செய்துவிட்டது.

இதன் மூலம், விஜய்யின் மெர்சல், அஜித்தின் விவேகம் படத்தின் தெலுங்கு பதிப்பை விட இவை அதிகம் என கூறப்படுகின்றது.