Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மெர்சல் படத்தில் இருந்து சர்காரில் விஜய்யின் மார்க்கெட் எவ்வளவு உயர்ந்துள்ளது தெரியுமா?- முக்கிய பிரபலம் தகவல்

தமிழில் ரஜினிக்கு பிறகு மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டே வருகிறார் விஜய். அதற்கு அவருடைய அடுத்தடுத்த படங்களும் அவருக்கு செம மாஸ் வரவேற்பை கொடுக்கிறது.

மெர்சல் படம் அதிகம் சொல்லும் அளவிற்கு எல்லா இடத்திலும் பெரிய தொகைக்கு விலைபோனது. அப்படத்தை விட விஜய் மார்க்கெட் உயர்ந்துள்ளதாகவும் சர்கார் படம் வேற லெவல் பிசினஸ் ஆகிறது என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் விஜய்யின் மார்க்கெட் உயர்ந்துள்ளது என்பதை அழுத்தமாக கூறியுள்ளார் பிரபல திரையரங்க உரிமையாளர் அபிராமி ராமநாதன்.

மெர்சல் படத்தின் வியாபாரத்தை விட சர்கார் பட வியாபாரம் 25% உயர்ந்துள்ளது, விஜய் மார்க்கெட்டும் உயர்ந்திருக்கிறது என்று கூறியுள்ளார்.