Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதியின் கோட்டையான கேரளாவில் இந்த முறை சர்காருக்கு அதிக திரையரங்குகள் கிடையாது- இதுதான் காரணம்

தளபதி விஜய் நடித்திருக்கும் சர்கார் படம் இந்தியா முழுவதும் வரும் தீபாவளிக்கு பிரமாண்டமாக வெளியாக உள்ளது. சன்பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார்.

விஜய் படம் என்றாலே தமிழகத்திற்கு அடுத்ததாக கேரளாவில் தான் அதிக வசூலை அள்ளும். ஆனால் இந்த முறை அதில் மாற்றம் இருக்கும் என்றே தோன்றுகிறது.

ஏனென்றால் மலையாளத்தில் தீபாவளியை எல்லாம் அவ்வளவு விமர்சையாக கொண்டாட மாட்டார்கள். அதனால் அந்த தேதியில் மற்ற மொழி நடிகர்களில் அதிக ரசிகர்களை கொண்டிருக்கும் விஜய்யின் படம் தான் எல்லா திரையரங்குகளிலும் வெளியாகும். இதுதான் மெர்சலுக்கும் நடந்தது.

ஆனால் இம்முறை மோகன்லாலின் ட்ராமா படம் வருகிற 1ஆம் தேதி வெளியாக உள்ளதால் எப்போதும் மோகன்லாலுக்கென இருக்கும் ரசிகர்களுக்காக திரையரங்குகளில் இப்படம் ரிலீஸாகும். இதனால் மிச்சமிருக்கும் திரையரங்களிலேயே சர்கார் வெளியாகும். இதனால் கேரளா தரப்பில் இருந்து வரும் வசூல் குறையும் என்றே தெரிகிறது.

ட்ராமாவின் தீவிரம் இடைப்பட்ட 4 நாட்களில் குறைந்தால் மட்டுமே சர்காரின் காட்சிகள் அதிகரிக்கும்.