Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்துடன் படம் தள்ளிப்போய்க் கொண்டே இருக்க காரணம்- முதன்முதலாக பதில் அளித்த முருகதாஸ்

அஜித்தை தீனா என்ற படத்தின் தல என்ற பெயருக்கு சொந்தக்காரர் ஆக்கியவர் ஏ.ஆர். முருகதாஸ். இவர் தற்போது விஜய்யை வைத்து சர்கார் என்ற ஒரு பெரிய படத்தை இயக்கியுள்ளார், படமும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது.

ஆனால் இப்பட கதை பற்றி பிரச்சனை எழும்ப முருகதாஸ் பேட்டிகள் கொடுத்திருந்தார். அதில் ஒரு பேட்டியில் அஜித் படம் குறித்து கேட்டபோது, என் நலம் விரும்பிகள் அனைவரும் அவருடன் படம் எப்போது என்ற கேட்கிறார்கள்.

எனக்கும் அவருக்கும் ஒரு பெரிய கேப் விழுந்துவிட்டது, அவர் பெரிய நபர் நமக்கு அடையாளம் எல்லாம் கொடுத்திருக்கிறார். எப்படியாவது ஒரு வாய்ப்பு யார் மூலமாவது இல்லை அவர் மூலமாக வரும் என நம்புகிறேன்.

அதுக்கு ஒரு நேரம், காலம் வரும்போது ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் படமாக இருக்கும் என்று பேசியுள்ளார்.