Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் சர்கார் படத்திற்கும் இந்த சமூக போராளிக்கும் இப்படியொரு தொடர்பு உள்ளதா!

விஜய் நடிப்பில் தற்சமயம் உருவாகியுள்ள படம் தான் சர்கார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்த படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியான இப்படத்தின் டீசரில் யாரும் கவனிக்காத வண்ணம் ஒரு சீனில் விஜய்க்கு பின்புறமாக இருக்கும் டிவியில் தற்சமயம் சமூக போராளியாக இருக்கும் பியூஸ் மனுஷின் போட்டோ இடம் பெற்றுள்ளது.

இதை பற்றி பியூஸுடமே கேட்டதற்கு, முதலில் அதை பார்த்து நானே ஷாக்கானேன். எதற்காக என்னுடைய போட்டோவை அவர்கள் வைத்தார்கள் என்று எனக்கே தெரியவில்லை. சர்கார் படத்தின் சில காட்சிகள் மூக்குநேரி ஏரியில் படமாக்கியுள்ளனர் என்றார்.

இந்த பியூஸ் மனுஷ் என்பவர் தான் மூக்குநேரி ஏரியை பாதுகாக்க பல வருடங்களாக போராடி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.