Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2,3 மணிக்கு எல்லாம் FDFS கிடையாது, சர்கார் பட தயாரிப்பு நிறுவனம் அதிரடி- முதல் காட்சி ஆரம்பமே எப்போது தெரியுமா?

பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் என்றால் திரையரங்க உரிமையாளர்கள் அன்று இரவு கண்டிப்பாக தூங்க மாட்டார்கள்.

ஏனெனில் ரசிகர்களின் வருகை, ஆட்டம் பாட்டம், பட்டாசு, கொண்டாட்டம் என அதிரடியாக இருக்கும். சென்னையில் கண்டிப்பாக ரசிகர்கள் FDFS அதிகாலையில் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி தான் சர்கார் படத்திற்கும் 1 மணிக்கு இருந்தாலும் ஓகே, அப்போதே முதல் காட்சி திரையிடுங்கள் என தங்களது ஆசையை ரசிகர்கள் வெளிப்படுத்தினர்.

ஆனால் தற்போது வந்த தகவல் என்னவென்றால் சன் பிக்சர்ஸ் USAவில் எந்த நேரத்தில் முதல் காட்சி ஒளிபரப்பாகிறதோ அதே நேரம் தான் தமிழ்நாடு முழுவதும் திரையிடப்படும். அப்படி தான் திரையிட வேண்டும் என்று சன் பிக்சர்ஸ் விநியோகஸ்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்களாம். அப்படி பார்த்தால் விஜய்யின் சர்கார் பட முதல் காட்சி 4.30 அல்லது 5 மணியில் இருந்து தான் தொடங்கும்.

ரசிகர்கள் 1 மணி காட்சி எல்லாம் எதிர்ப்பார்த்த நிலையில் 5 மணிக்கு தான் ஆரம்பம் என்று கேட்டதும் கொஞ்சம் வருத்தம் அடைந்துள்ளனர்.