Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்காருடன் மோதினால் ஒரு பைசா கூட வராது, பெரிய ரிஸ்க்- பிரபல தயாரிப்பாளரின் வெளிப்படையான பேச்சு

சர்கார் தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்ப்பார்க்கும் ஒரு பெரிய படம். நாட்கள் நெருங்க நெருங்க படக்குழு படத்தை எப்படி ரசிகர்கள் வரவேற்க போகிறார்கள் என்ற பெரிய ஏக்கத்தில் இருக்கிறார்கள்.

சன் பிக்சர்ஸ் சர்கார் படத்திற்காக புரொமோஷன் வேலைகளை படு பிரம்மாண்டமாக செய்கின்றனர். இந்த நேரத்தில் நவம்பர் 16ம் தேதி 4 படங்கள் களமிறங்கவுள்ளது.

ஜோதிகாவின் காற்றின் மொழி படத்தை தீபாவளி அன்றே வெளியிட்டிருக்கலாம் என்று ஒரு ரசிகர் டுவிட் செய்ய அதற்கு அப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் தனஞ்செயன், சர்காருக்கு முன்னால் ஒரு ரூபாய் கூட கிடைக்காது சார், அடுத்த வாரம் முழுவதும் ரசிகர்களின் எண்ணம் சர்கார் மீது தான் இருக்கும், பெரிய ரிஸ்க் என பதில் டுவிட் செய்துள்ளார்.