Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

புதிதாக வந்த விஸ்வாசம் போஸ்டரால் படு சோகத்தில் அஜித் ரசிகர்கள்- ஆனால்?

அஜித்தின் விஸ்வாசம் படம் இந்த தீபாவளிக்கு சர்கார் படத்துடன் வர வேண்டியது. ஆனால் இவ்வருட தொடக்கத்தில் நடந்த சினிமா ஸ்ட்ரைக்கால் படப்பிடிப்பு தள்ளிப்போனது.

படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது, இதனால் படம் சம்பந்தப்பட்ட விஷயங்களை சரியான நேரம் பார்த்து பொறுமையாக படக்குழு வெளியிட்டு வருகின்றனர். கடைசியாக படத்தின் இரண்டாவது ஃபஸ்ட் லுக் வெளியாகி இருந்தது, இதற்கு கலவையான கமெண்ட்ஸ் வந்தது.

இந்த நேரத்தில் பிரபல பத்திரிக்கை அஜித்-நயன்தாரா பைக்கில் இருப்பது போல் ஒரு புகைப்படத்தை முதல் பக்கத்தில் அச்சடித்து வெளியிட்டுள்ளனர். அதைப் பார்த்த ரசிகர்கள் இது மம்முட்டியுடன் நயன்தாரா நடித்த மலையாள படத்தின் போஸ்டர், அஜித் முகத்தை மட்டும் எடிட் செய்துள்ளார்கள் என்று கூறி கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

இதனால் அஜித் ரசிகர்கள் படக்குழு வெளியிடவில்லை என்றாலும் தல படத்திற்கு இப்படி ஆனதே என கவலைப்பட்டு வருகின்றனர்.