Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பேனர்கள் கிழித்து நாசம் செய்த அரசியல்வாதிகள்- கடும் கோபத்தில் களத்தில் குதித்த விஜய் ரசிகர்கள், வெடித்த பிரச்சனை

விஜய்யின் படங்களுக்கு பிரச்சனை வந்தே ஆக வேண்டும் என்று இருக்கிறது போல. ஒன்று பட ரிலீஸுக்கு முன்பே வெடிக்கிறது இல்லை ரிலீஸிற்கு பிறகு பிரச்சனை வருகிறது.

சர்கார் படம் வெற்றிகரமாக தீபாவளிக்கு வெளியாகி வசூலில் வேறொரு சாதனை படைத்து வருகிறது.

அதேசமயம் ஆளும் அரசியல் கட்சி அரசுக்கு எதிரான விஷயங்களை சர்கார் படத்தில் பேசியுள்ளனர், அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என கூறிவருகின்றனர்.

இன்னும் ஆரணி போன்ற இடங்களில் ஆளும் கட்சியாளர்கள் சர்கார் பட பேனர்கள், போஸ்டர்கள் கிழித்து திரையரங்கம் முன் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் அட்டகாசம் செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.