Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மூன்றாவது நாளிலேயே விஜய்யின் சர்கார் பட வசூலுக்கு விழுந்து பேரடி- வருத்தத்தில் ரசிகர்கள்

முருகதாஸ் இயக்கிய விஜய்யின் சர்கார் படத்திற்கு ரிலீஸிற்கு முன் கதை திருட்டு பிரச்சனை இருந்தது. ரிலீஸாக முதல் நாள் எந்த ஒரு மைனஸும் இல்லாத ரசிகர்களும் கொண்டாடினர்.

அடுத்த நாளே தற்போதைய ஆளும் கட்சி சர்கார் படத்தின் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று இல்லையெனில் பெரிய பிரச்சனையை சந்திக்க நேரிடும் என்றனர்.

இன்று அடுத்தக்கட்டமாக ஆளும் கட்சியினர் மதுரை, ஆரணி போன்ற இடங்களில் சர்கார் திரையிடும் திரையரங்குள் முன் வைத்திருந்த பேனர்கள், போஸ்டர்கள் எல்லாம் கிழித்து அராஜகம் செய்து வருகின்றனர்.

இதனால் மதுரையில் உள்ள சினிப்பிரியா தியேட்டர் காம்ப்ளக்ஸில் உள்ள சினிபிரியா, மினிபிரியா, சுகப்பிரியா என மூன்று திரையரங்குகளில் பிற்பகல் 2.30 மணி காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல். அதேபோல் போராட்டம் அதிகமாக தெரியும் நிலையில் அங்கங்கே உள்ள சர்கார் திரையிடும் திரையரங்குகளும் காட்சிகளை ரத்த செய்து வருகிறார்களாம்.