Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யினால் தான் எங்களுக்கு இவ்வளவு பிரச்சனையும்! கோபத்தை போட்டுடைத்த பிரபலம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த சர்கார் படம் தியேட்டர்களில் சக்கைப்போடு போட்டு வருகிறது.

இந்நிலையில் விஜய்யின் சர்கார் படத்தால் தான் எங்களின் திமிரு பிடிச்சவன் படம் குறித்த நேரத்தில் வெளியாகவில்லை என்று இப்படத்தின் நடிகர் விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா கோபமான ட்விட்டை தற்போது பதிவிட்டுள்ளார்.

அதில், விஜய்யின் சர்கார் படமே தமிழ் நாட்டில் மட்டும் 800 திரையரங்குகளுக்கு மேல் ஆக்கிரமித்துவிட்டது. இதனால் தயாரிப்பாளர் சங்கத்தில் அனுமதி வாங்கிய பின்பும் எங்களால் குறித்த தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை என்றார்.