Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் 63வது படத்தின் படப்பிடிப்பே தொடங்கவில்லை அதற்குள் முதல் நாள் மட்டும் இத்தனை டிக்கெட் புக்கிங்கா?- இது வேற லெவல்

விஜய்யின் 63வது படத்தின் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு வேலைகளும் தொடங்கிவிட்டது. இப்படத்தை தயாரிக்கும் AGS நிறுவனம் ரசிகர்களை காக்க வைக்காமல் படத்தில் நடிப்பவர், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரின் விவரத்தையும் வெளியிட்டு விட்டனர்.

அடுத்த வருடம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகப்போகும் இப்படத்திற்கு விஜய் ரசிகர் ஒருவர் முதல் நாள் பார்க்க இப்போதே 2000 டிக்கெட்டுகள் வேண்டும் என கேட்டிருக்கிறார்.

ரோகிணி திரையரங்கத்தைச் சேர்ந்த நிகிலேஷ் சூர்யாவின் நண்பர் தான் அந்த விஜய் ரசிகர். எனவே, இந்தத் தகவலை அவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.