Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் 63வது படத்திற்காக சூப்பர் இடம் பார்த்த அட்லீ- குழுவுடன் எடுத்த புகைப்படம்

அட்லீ படங்கள் என்றாலே தனி வரவேற்பு இருக்கும். சினிமாவில் நுழைந்த சிறிய காலத்திலேயே முன்னணி நடிகரான விஜய்யை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துவிட்டது.

அதை அவர் தெறி, மெர்சல் என இரண்டு வெற்றி படங்களை கொடுத்து தன்னை நிரூபித்தும் விட்டார். அடுத்து மூன்றாவது முறையாக விஜய்யுடனேயே கூட்டணி அமைக்கிறார். படத்திற்கான பூஜை ஏற்கெனவே போடப்பட்டு விட்டது, பட வேலைகளில் பிஸியாக இருக்கும் அட்லீ லொகேஷன் தேடுவதில் பிஸியாக இருக்கிறார்.

அண்மையில் தன்னுடைய உதவி இயக்குனர்கள் குழுவோடு சென்னையில் உள்ள SSN கல்லூரியில் இடங்கள் பார்த்துள்ளார் அட்லீ. அந்த புகைப்படம் இப்போது சமூக வலைதளங்களில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.