Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கர்நாடகாவில் யார் மாஸ் ரஜினியா, விஜய்யா?- சர்கார், 2.0 வசூலால் முதலிடம் பிடித்தது யார்?

விஜய்யின் சர்கார் படம் தீபாவளிக்கு வெளியாகி இருந்தது. ரஜினியின் முந்தைய படங்களில் வசூல் சாதனையை பல இடங்களில் முறியடித்தது, அதை ரசிகர்களும் கொண்டாடினர்.

சர்கார் படத்தின் மூலம் விஜய்யின் வசூல் வேட்டை ஓரளவிற்கு முடிவுக்கு வர தற்போது ரஜினி வசூல் சாதனை செய்து வருகிறார்.

எங்கு எடுத்துக் கொண்டாலும் 2.0 படம் வசூல் பற்றி மாஸ் விவரம் வருகிறது. நான்கு நாட்களில் படம் ரூ. 400 கோடி என தயாரிப்பு குழுவே அறிவித்ததால் ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு ஒரு அளவே இல்லை.

இப்போது ஒரு விஷயம் வந்துள்ளது, அதாவது கர்நாடகாவில் விஜய்யின் சர்கார் படத்தின் முழு வசூலை முறியடித்து ரஜினி முதல் இடத்தை பிடித்துள்ளாராம். அங்கு 2.0 படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் கர்நாடகாவில் அதிகம் வசூலித்து தமிழ் படம் என்பதன் மூலம் முதல் இடத்தில் இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.