Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியின் பேட்ட படத்தின் மாஸ் அறிவிப்பு இதோ- ஆடியோ வெளியீடு எப்போது தெரியுமா? டிரைலர் பற்றியும் ஒரு தகவல்

ரஜினி ஸ்டைலாக நடந்து வந்தாலே அவரது ரசிகர்கள் மயங்கிவிடுவார்கள். அப்படி அவர் செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் ரசிகர்கள் ரசித்துள்ளனர்.

2.0 படத்தை தொடர்ந்து ரஜினியின் பேட்ட படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. படத்தில் ரஜினியின் லுக் தெறி மாஸாக வந்துள்ளது, அதோடு மரண மாஸ் என்ற பாடல் இப்போது ரசிகர்களின் பேவரெட்டாக அமைந்துவிட்டது.

பொங்கலுக்கு இப்பட ரிலீஸ் என்பதால் புரொமோஷன் வேலைகள் நடந்து வருகிறது. தயாரிப்பு குழு தினமும் படத்தில் நடிப்பவர்களின் லுக்கை வெளியிட்ட வண்ணம் உள்ளனர். அதோடு படத்தின் பாடல் வெளியீடு வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் என அறிவித்துள்ளனர்.

பாடல்கள் வெளியீட்டை தொடர்ந்து ரசிகர்கள் டிரைலர் எப்போது என கேட்க ஆரம்பித்துவிட்டனர். நமக்கு கிடைத்த தகவலின்படி படத்தின் டிரைலர் வரும் டிசம்பர் 12 ரஜினி அவர்களின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என கூறப்படுகிறது.