Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் மரணமாஸ்! பேட்டயின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்கின் பெயர் இதுதான்

ரஜினியின் நடிப்பில் வருகிற பொங்கலுக்கு பேட்ட படம் வெளியாக உள்ளது. இப்படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் மரண மாஸ் பாடல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக் பாடல் உல்லாலா என்ற பெயரில் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற ஞாயிற்று கிழமை பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

மேலும் இப்படத்தின் இசை உரிமையை பிரபல சோனி மியுசிக் நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.