Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2.0 ரசிகர்கள் ஆவலாக எதிர்ப்பார்த்த தமிழகத்தில் உண்மையான வசூல் இது தான்

2.0 உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. இப்படத்தின் மூலம் ரஜினி தன் திரைப்பயணத்தில் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

ரஜினி மட்டுமில்லை தமிழ் சினிமாவும் தான், தமிழில் ஒரு படம் ரூ 500 கோடி வசூல் செய்வது இதுவே முதன் முறையாம்.

சரி, அது இருக்கட்டும் தற்போது தமிழகத்தில் 2.0 நிலை தான் என்ன? என்று பலருக்கும் கேள்வி இருக்கும்.

3டி பொறுத்தவரை 2.0 மெகா வசூல் தான், திரையிட்ட அனைத்து இடங்களிலும் கூட்டம் அலை மோதுகின்றது, ஆனால், 2டி-க்கு கூட்டமே இல்லை.

இது ஒரு புறம் இருக்க தற்போது தமிழகம் முழுவதும் 2.0 ரூ 85 கோடி வரை வசூல் செய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

எப்படியும் ரூ 120 கோடி வரை தமிழகத்தில் 2.0 வசூல் செய்யும் என்பது எல்லோருடைய கணிப்பு பார்ப்போம்.