Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கமல்ஹாசன்-ஷங்கர் இணையும் இந்தியன் 2 படத்தின் இசையமைப்பாளர் உறுதியானது

ரஜினியை வைத்து ரூ. 600 கோடி பட்ஜெட்டில் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் அளவிற்கு ஒரு பிரம்மாண்ட படத்தை கொடுத்தவர் ஷங்கர்.

இவரது படங்களுக்கு எப்போதுமே பெரிய வரவேற்பு இருக்கும் அதுவும் ரஜினி இருக்கும் படம் என்றால் சொல்லவே வேண்டாம்.

இந்த 2.0 படம் வசூலில் தூள் கிளப்பி வருகிறது, இதுவரை ரூ. 600 கோடிக்கு படத்தின் வசூல் சொல்லப்படுகிறது. மக்களின் ஆதரவு படத்திற்கு பெரிதாக இருப்பதால் இன்னும் பட இடங்களில் படம் வெற்றிகரமாக ஓடுகிறது.

ஷங்கர் அவர்கள் இப்படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் அவர்களை வைத்து இந்தியன் 2 படத்தை எடுக்க இருக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் தான் கமிட்டாகியுள்ளாராம், அதனை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.