Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசம் படத்தின் அடிச்சுதூக்கு பாடலால் கிண்டலுக்கு ஆளான அஜித் ரசிகர்கள்

சினிமா ரசிகர்களுக்கு அடுத்தடுத்து கொண்டாட்ட விஷயங்களாக வெளியாகி வருகிறது. இம்மாத ஆரம்பத்தில் ரஜினியின் பேட்ட பட பாடல்கள் வெளியானது.

அதை கேட்டு கொண்டாட்டம் போட்டு முடிப்பதற்குள் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் அடிச்சுதூக்கு பாடல் அதிரடியாக வெளியானது. இப்போது வரை அடிச்சுதூக்கு பாடல் 4 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்து வருகிறது.

ஆனால் பாடல் ரிலீஸ் ஆகும் நேரத்தில் அஜித் ரசிகர்கள் செய்த ஒரு செயல் கிண்டலாக பேசப்படுகிறது. தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் நேற்று (டிசம்பர் 10) மாலை தனது ட்விட்டர் பக்கத்தில், ட்விட்டரில் என்ன நடக்கிறது என்று பதிவு செய்துள்ளார்.

அதை பார்த்ததும் அஜித் ரசிகர்கள் அவரின் டுவிட் கீழ் விஸ்வாசம் பாடல் வருகிறது என பதிவு செய்துள்ளனர்.

இதைப்பார்த்த சிலர் தென்னாப்பிரிக்கா அணியின் வேகப் பந்து வீச்சாளரிடம் ஏன் அஜித் ரசிகர்கள் பாடலைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று ட்விட்டர் பக்கத்தில் பலரும் கிண்டல் செய்தனர்.