Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உலகம் முழுவதும் 2.0 இதுவரை எத்தனை கோடி வசூல் தெரியுமா? முழு விவரம் இதோ

2.0 இந்திய சினிமாவே வியந்து பார்க்கும்படி வசூல் சாதனை செய்து வருகின்றது. ரசிகர்கள் மத்தியில் இப்படம் குறிப்பாக குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் 2.0 உலகம் முழுவதும் நேற்று வரை ரூ 640 கோடி வசூல் செய்துள்ளது, இந்தியாவில் மட்டும் ரூ 500 கோடி வசூல் செய்துள்ளது.

வெளிநாடுகளில் ரூ 140 கோடி வசூல் செய்துள்ளதாம், எப்படியும் இப்படம் ரூ 700 கோடி வரை ஒட்டு மொத்த வசூல் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

சீனாவில் படம் ரிலிஸான பிறகே இப்படம் ரூ 1000 கோடி கிளப்பில் இணையுமா? என்பதை எதிர்ப்பார்க்க முடியும்.