Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாரி 2 டீஸரில் வந்த பக்கா பஞ்ச் வசனம் காப்பியா?- அப்படியே இந்த படத்தில் இருக்கிறதே

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாக போகும் படம் மாரி 2. இந்த படம் வரும் டிசம்பர் 21ம் தேதி வெளியாக இருக்கிறது, படத்தின் பாடல்கள், டீஸர் எல்லாம் வெளியாகிவிட்டது.

டீஸரில் தனுஷ் If you're bad, then I'm your dad என்ற வசனம் பேசியிருப்பார், அந்த வசனம் ரசிகர்களிடம் வைரலானது.

இந்த வசனம் அப்படியே இதற்கு முன் ஒரு படத்தில் வந்துள்ளதாம். அதாவது கன்னட படமான KFG என்ற படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வரும் 21ம் தேதி வெளியாக இருக்கிறது.

இப்பட கதாநாயகன் யஷ் ஒரு பேட்டியில், தனுஷ் படத்தில் வரும் அந்த வசனம் என்னுடைய முந்தைய படத்தில் உள்ளது என அந்த வசனத்தையும் பேசி காட்டியுள்ளார்.