Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்கார் படத்தால் கைது போன்ற பிரச்சனையில் இருந்து வெளியே வர ஏ.ஆர். முருகதாஸ் அதிரடி

ஏ.ஆர். முருகதாஸ் கடைசியாக இயக்கிய படம் சர்கார். விஜய்யுடன் மூன்றாவது முறையாக உருவாக்கிய இப்படம் முழுக்க முழுக்க அரசியல் பற்றிய கதை. படம் ரிலீஸிற்கு முன்பும் பின்பும் நிறைய பிரச்சனைகளை சந்தித்தது.

எப்படியோ பிரச்சனைகளை சமாளித்த தயாரிப்பு குழுவிற்கு சர்கார் வெற்றி படமாக அமைந்துவிட்டது. இப்படத்தில் அரசு வழங்கும் இலவச பொருட்கள் குறித்து சர்ச்சைக்குரிய காட்சி இருந்ததாக கூறி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனால் அவர் கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்று ஏ.ஆர். முருகதாஸ் தரப்பில் ஒரு மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில் 3 பிரிவுகளில் பதிவு செய்யப்பட்டிருக்கும் வழக்கை ரத்து செய்யக்கோரி இயக்குனர் முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.