Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2.0 படம் மூலம் புதிய சாதனை செய்த ரஜினி- இனி விஜய், அஜித் இதை முறியடிப்பார்களா?

ரஜினி இந்திய சினிமாவே கொண்டாடும் ஒரு பெரிய நடிகர். நேற்று இவரது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களை தாண்டி பிரபலங்கள் பலர் வாழ்த்து கூறி வந்தனர்.

இவரது 2.0 படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கி வருகிறது. இப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் லைகா நிறுவனமும் படு குஷியில் இருப்பதாக தெரிகிறது, அடுத்தடுத்து புதிய படங்களை தயாரிக்கவும் ஆரம்பித்துவிட்டனர்.

2.0 படம் சென்னையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. 14 நாட்கள் முடிவில் ரூ. 20.11 கோடி வசூலித்து சென்னையில் அதிகம் வசூலித்த படம் என்ற வரிசையில் முதல் இடம் பிடித்துள்ளது.

இனி வரும் பெரிய நடிகர்களின் படங்கள் இவரது இப்பட சாதனையை முறியடிப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.