Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி - டாப் ஸ்டார் இஸ் பேக்

பிரஷாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ஜானி படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று பெரும்பாலான திரையரங்குகளில் வெற்றிநடைப் போட்டு வருகிறது.

தியாகராஜன் கதை, திரைக்கதை மற்றும் தயாரிப்பில் பிரஷாந்த், சஞ்சிதா ஷெட்டி, பிரபு, ஆனந்த் ராஜ், தேவ தர்சினி ஆகியோரின் நடிப்பில் உருவாகி நேற்று உலகம் முழுவதும் வெளியான படம் ஜானி.

கள்ள நோட்டுகளை மையமாக வைத்து உருவாகி இருந்த இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பலரும் படத்தை பற்றி பாசிட்டிவான விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இதனால் ஜானி படத்தை பார்க்க தியேட்டருக்கு வரும் மக்கள் கூட்டமும் அதிகரித்துள்ளது, அதே சமயம் தியேட்டர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளதால் படக்குழுவினரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.