Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சைலன்ஸ் என்று விஜய் கத்தியதன் பின்னணி இது தானாம், நீண்ட நாள் கழித்து வந்த தகவல்

தளபதி விஜய் இன்று உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் இந்த உயரத்தை அடைய ஆரம்பத்தில் பல தடைகளை தாண்டி வந்தவர் தான்.

அந்த வகையில் விஜய் ஒரு கட்டத்தில் கடுமையான தோல்விப்படங்களை கொடுத்து வந்தார், அப்போது வந்த படம் தான் வில்லு.

இந்த படமும் ரசிகர்களை மிகவும் சோதித்து தான் பார்த்தது, வில்லு படத்தின் போது ஒரு நிகழ்வில் ‘சைலன்ஸ்’ என்று கோபமாக கத்துவார்.

இதை பலரும் இத்தனை நாட்களாக ஏதோ ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு என்று தான் நினைத்து வந்தார்கள்.

ஆனால், விஜய் பத்திரிகையாளர்களில் மிகவும் மரியாதையாக நடந்துக்கொள்வாராம், இது ஒரு ரசிகர்கள் சந்திப்பு நிகழ்வாக தான் இருக்கும் என ஒரு மூத்த பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

அந்த கூட்டத்தில் விஜய்யை பேச விடாமல் பின்னால் ரசிகர்கள் கூச்சலிடவே விஜய் அப்படி செய்திருப்பார் என கூறப்படுகின்றது.