Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தயாரிப்பாளர் சங்கம் பூட்டிய வழக்கில் நீதிமன்றம் அதிரடி கேள்வி, கடைசில இப்படி ஆகிடுச்சே

தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத்தில் பல பஞ்சாயத்து நடந்து வருகின்றது. நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவர் ஆனதும், அவரை சுற்றி பல கேள்விகள் கேட்டுக்கொண்டே வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் முறைக்கேடு செய்ததாக சங்கத்தை பூட்டினார்கள். இந்த பிரச்சனை நீதிமன்றம் வரை சென்றது.

இதை விசாரித்த நீதிபதி தற்போது ’சங்க பிரச்னையை நீதிமன்றத்தை அணுகி அவர்கள் தீர்த்துக் கொள்ளட்டும், போலீஸ் ஏன் தலையிடுகிறது என கேள்வி கேட்டுள்ளனர்.

அதோடு, சங்கத்திற்கு பூட்டு போட்டது தவறு என அதிருப்தி தயாரிப்பாளர் தரப்புக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்து, விஷால் முறைகேடு செய்தார் என்றால் புகார் கொடுக்காமல் சங்கத்தை பூட்டுவீர்களா?’ என்று கேள்வியும் எழுப்பியுள்ளனர்.