Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பல வருடங்களுக்கு பிறகு ரஜினி-விஜய் மோதும் நிலைமை, யார் காரணம்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய் தமிழ் சினிமாவின் மிகப்பெரும் பாக்ஸ் ஆபிஸ் மன்னர்கள். இவர்கள் படங்களின் வசூல் சாதனையை இவர்களே மாறி மாறி உடைப்பார்கள்.

அந்த வகையில் ரஜினி அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார், விஜய் அட்லீ இயக்கத்தில் நடித்து வருகின்றார்.

இந்த இரண்டு படங்களையுமே அடுத்த வருட தீபாவளிக்கு கொண்டு வர தான் முயற்சிகள் நடந்து வருகின்றதாம்.

ஏற்கனவே இந்த பொங்கலுக்கு பேட்ட, விஸ்வாசம் மோதுகின்றது, அப்படியிருக்க மீண்டும் ரஜினி ஒரு மோதலுடன் வருவது அனைவருக்கும் ஆச்சரியம் தான்.

ஏனெனில் ரஜினி எப்போதும் இப்படியான மோதலை விரும்புவது இல்லை, ஆனால், சமீப காலமாக அவர் கை மீறி இப்படியான மோதல்கள் நடந்து வருவதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

பேட்ட விஷயத்தில் சன் பிக்சர்ஸ் தான் வேண்டுமென்றே மோதலுக்கு வருவதாக கூறப்படுகின்றது, ஏனெனில் விஸ்வாசம் முன்பே ரிலிஸ் தேதி சொன்ன படம், அப்படியிருக்க பேட்ட் வருகை சில உள்நோக்கம் என கூறப்படுகின்றது.

மேலும், இதற்கு முன் ரஜினி-விஜய், சந்திரமுகி-சச்சின் படத்தின் மூலம் மோதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.