Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அட்லீ-விஜய் புதிய படத்தில் இந்த பிரபலமா?- புகைப்படம் பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி

விஜய்யின் 63வது படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் தொடங்க இருக்கிறது. படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் எல்லாம் நடந்து வருகிறது, அடுத்தடுத்து படம் குறித்து வரும் தகவலால் ரசிகர்கள் கொஞ்சம் கொண்டாட்டத்தில் தான் உள்ளனர்.

இப்போது என்னவென்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் புரொடக்ஷன் டிசைனராக பணிபுரிந்த சுரேஷ் செல்வராஜன் சமீபத்தில் அட்லீயை சந்தித்துள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, நீண்ட இடைவேளைக்கு பிறகு நண்பரை சந்தித்ததாகவும், இந்த சந்திப்பு தனக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பின் மூலம் சுரேஷ் தளபதி 63வது படத்தில் பணிபுரிய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.