Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கியமான இந்த திரையரங்கில் பாகுபலியை ஓரங்கட்டிய 2.0! தியேட்டர் உரிமையாளரே அறிவிப்பு

ரஜினியின் நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் 2.0. ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது.

உலகம் முழுவதும் வெளியான இப்படம் தற்போது வரை பல சாதனைகளை செய்து கொண்டு தான் இருக்கிறது. அதிலும் முக்கியமாக பல இடங்களில், தென்னிந்திய படங்களில் அதிக வசூலை குவித்த ராஜமௌலியின் பாகுபலி வசூலையே முறியடித்துள்ளது.

தற்போது அந்த வரிசையில் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கான GK சினிமாஸும் இணைந்துள்ளது. இத்திரையரங்கில் பாகுபலியின் சாதனையை 2.0 முறியடித்துவிட்டதாக திரையரங்கின் உரிமையாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.