Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

KGF முதல் நாள் பிரமாண்ட வசூல்- உலகம் முழுவதும் இத்தனை கோடியா!

இந்திய சினிமாவை பொறுத்தவரை ஹிந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிப்படங்களே பலருக்கும் தெரியும். இதை தாண்டி கன்னட சினிமா எல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் இருந்தது.

ஆனால், கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் KGF நேற்று உலகம் முழுவதும் ரிலிஸானது, இப்படம் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.

ஆம், இதுவரை வந்த கன்னட படங்களிலேயே முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் படமாக KGF இடம்பெற்றுள்ளது.

இப்படம் உலகம் முழுவதும் முதல் நாள் ரூ 24 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.