Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படம் ரிலீஸ் ஆகி இத்தனை நாட்கள் தாண்டியும் ரஜினி மட்டுமே செய்யும் சாதனை- வசூல் இல்லை இது வேறு

ரஜினியின் 2.0 படம் பெரிய எதிர்ப்பார்ப்புக்கு இடையே வெளியானது. ரூ. 600 கோடி பட்ஜெட் என கூறப்படும் இப்படம் இதுவரை ரூ. 700 கோடிக்கு மேல் வசூலித்துவிட்டது, இன்னும் ஓடிக் கொண்டிருப்பதாக முழு வசூலை பொறுத்திருந்து அறிவோம்.

சீனாவிலும் அடுத்த வருடம் வெளியாகிறது, அங்கு இதுபோன் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கு என கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் நேற்று (டிசம்பர் 21) முக்கிய நடிகர்களின் படங்கள் வெளியானது. மாரி 2, அடங்கமறு, கனா, சிலுக்குவார் பட்டி சிங்கம், சீதக்காதி என இத்தனை படங்கள் வந்தது.

ஆனால் இந்த படங்களை தாண்டி ரஜினியின் 2.0 படத்திற்கு தான் அதிக ரசிகர்கள் விரும்புகிறார்களாம். இதனால் மெயின் திரையரங்கில் 2.0 படம் திரையிட இருப்பதாக ரோஹினி திரையரங்க உரிமையாளர் டுவிட் செய்துள்ளார்.