Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சினிமா டிக்கெட்டுகளுக்கான GST வரி குறைப்பு, இனி எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் சந்தோஷம்

திரையரங்கிற்கு வந்து தற்போது படம் பார்ப்பது மக்களிடையே மிகவும் குறைந்துள்ளது. இதற்கு பல காரணம் கூறப்பட்டாலும் திரையரங்க டிக்கெட் கட்டணம் மிக முக்கிய ஒன்று.

குடும்பத்துடன் ஒரு படத்திற்கு சென்று வரவேண்டும் என்றால் சுமார் ரூ 1000 செலவு ஆகிறது, என மக்கள் படத்திற்கு செல்வதையே குறைத்துவிட்டனர்.

இந்நிலையில் தற்போது சினிமா டிக்கெட்டுகளுக்கான GST வரியை குறைத்துள்ளனர், ஆம், இனி ரூ 100க்கு கீழ் விற்கும் டிக்கெட் 28%லிருந்து 18% ஆகவும், ரூ 100 மேல் விற்கும் டிக்கெட் 18%லிருந்து 12%ஆகவும் டிக்கெட் விலை குறைந்துள்ளது.