Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இப்பாடல் முதலில் எனக்கு விஸ்வாசம் படத்தின் பாடல் என்றே தெரியாது- பாடகரின் ஓப்பனான பேச்சு

அஜித்தின் நடிப்பில் விஸ்வாசம் படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்புகிடையே உள்ள இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் கடந்த வாரம் வெளியானது.

இந்நிலையில் இந்த படத்தின் ஓபனிங் அடிச்சி தூக்கு பாடலை இமானுடன் சேர்ந்து பாடிய நாராயணன் ரவிஷங்கர் இப்பாடலில் வரும் ட்ர்க்கு...டக்கிட...ட்ர்க்கு...டக்கிட வரியை பாடும் பொழுது ரொம்ப கஷ்டமாக இருந்தது.

அத்துடன் இப்பாடலை பாடும்போது இது அஜித்தின் விஸ்வாசத்திற்கு தான் வருகிறது என்றே எனக்கு தெரியாது. இந்த பாடல் திரையில் வரும் போது விஷுவலாக அனைத்து ரசிகர்களுக்கும் செம்ம ட்ரீட்டாக இருக்கும் என்றார்.