Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்புவின் படத்திற்கு மீது வந்த புது சர்ச்சை! காவல் துறையில் புகார் - பிரபல தயாரிப்பாளர் அதிரடி

சிம்புவுக்கு எப்போதுமே அதிக ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது. அவர் மீது அவர்கள் மிகுந்த பாசம் வைத்துள்ளார்கள். அவருக்கு பிரச்சனை வரும் போது இவர்கள் தான் அவருக்கு பலமாக இருக்கின்றார்கள்.

சிம்பு, ஜோதிகா இணைந்து நடித்த மன்மதன் படம் கடந்த 2003 ல் வந்தது. இப்படத்திற்கு சிம்பு கதை எழுதியதோடு, இயக்கியும் நடித்திருந்தார். இந்நிலையில் சிம்புவின் அப்பா டி.ஆர் அண்மையில் படம் குறித்து தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் மீது காவல் துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

இதில் அவர் மன்மதன் படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவன் மூலம் தெலுங்கு டப்பிங் உரிமையை விற்பனை செய்தோம். ஹிந்தி மற்ற மொழிகளில் படத்தை வெளியிடும் உரிமையும் பெற்றுள்ளோம்.

ஹிந்தியில் இப்படத்தின் மூலம் சிம்புவை அறிமுகம் செய்ய காத்திருந்தேன். ஆனால் சிம்பு பிசியாகிவிட்டார். இந்நிலையில் படத்தை விற்க முயற்சித்த போது பி.எல்.தேனப்பன் மன்மதன், வல்லவன் படத்தை விற்க விடமாட்டேன் என மிரட்டுகிறார். உரிமை அவரிடம் இருப்பதாக பொய் கூறுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இந்நிலையில் தேனப்பன் கூறுகையில் "வல்லவன் பட உரிமை என் நிறுவனத்திற்கு சொந்தமானது. அதன் உரிமையை 2016 நவம்பர் 3 ல் லேவின் கடிதம் மூலம் விற்பனை செய்தேன். ஆனால் வல்லவன் பட ஹிந்தி உரிமை தன்னிடம் உள்ளதாக டி.ஆர் கூறுகிறார். அப்படத்தை தயாரித்த நான் சிம்புவை இயக்குனராக அறிமுகப்படுத்தினேன்.

ஆனால் அவரால் பட்ஜெட் தாண்டி போய் எனக்கு நஷ்டம் ஏற்பட்டது. என்னை அவமதிக்கும் வகையில் டி.ஆர் பேசுகிறார். அவர் மீது நஷ்ட வழக்கு தொடர்வேன்" என கூறியுள்ளார்.