Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஹிந்தியிலும் அதிகம் விலைபோன அஜித்தின் விஸ்வாசம்- இத்தனை கோடியா?

சிவா இயக்கிய விஸ்வாசம் படம் இந்த தீபாவளிக்கே வெளியாக வேண்டிய படம். வருட தொடக்கத்தில் நடந்த சினிமா ஸ்ட்ரைக் பிரச்சனையால் ரிலீஸ் தள்ளிப்போனது.

இப்போது படம் முழுவதுமாக தயாராகி வரும் பொங்கலுக்கு ரிலீஸ். அதுவும் ரஜினியின் பேட்ட படத்துடன் இப்படம் மோத இருக்கிறது. இரண்டு படங்களுக்குமே திரையரங்குகள் கிடைப்பதில் சரியான போட்டி நடந்ததாக கூறப்படுகிறது.

வரும் ஜனவரி 1 படத்தின் டீஸர் வெளியாகும் என சொல்லப்படும் நிலையில் மற்றொரு விஷயம் வந்துள்ளது. அதாவது அஜித்தின் விஸ்வாசம் படத்தின் ஹிந்தி டப்பிங் ரைட்ஸ் ரூ. 13 கோடிக்கு விலைபோனதாம். இது அஜித் படங்களிலேயே அதிகம் என தெரிவிக்கின்றனர்.