Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கடும் போட்டிக்கு நடுவிலும் வசூலை அள்ளும் KGF! கொண்டாடும் ரசிகர்கள்

மற்ற மொழி சினிமா படங்களுக்கும் நம் தமிழ் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுப்பார்கள் என்பது அடிக்கடி நிரூபிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

பிரேமம், அர்ஜூன் ரெட்டி என சில படங்களை குறிப்பிட்டு சொல்லலாம். அந்த வகையில் அண்மையில் வந்த KGF கன்னட சினிமாவின் முக்கிய சாதனை படமாக மாறியுள்ளது.

இப்படம் 4 நாட்களிலேயே உலகம் முழுக்க ரூ 80 கோடி வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்தது. இந்நிலையில் இந்தியாவில் இப்படம் இதுவரை ரூ 21 கோடிகளை வசூல் செய்துள்ளதாம்.

  • வெள்ளி - ரூ 2.10 கோடி
  • சனி - ரூ 3 கோடி
  • ஞாயிறு - ரூ 4.10 கோடி
  • திங்கள் - ரூ 2.90 கோடி
  • செவ்வாய் - ரூ 4.35 கோடி
  • புதன் - ரூ 2.60 கோடி
  • வியாழன் - ரூ 2.40 கோடி

  • மொத்தம்: ரூ 21.45 கோடி