Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசத்தின் அடிச்சி தூக்கு பாடலின் காட்சி இப்படிதான் இருக்கும்! டி.இமானே கூறிய தகவல்

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படம் வெளியாக இன்னும் சில வாரங்கள் தான் உள்ளன. இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகிவிட்ட நிலையில் இதன் டிரைலருக்காக தான் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த இப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான் பாடல்கள் காட்சியமைக்கப்பட்டுள்ள விதத்தை பற்றி கூறியுள்ளார்.

அதில் அடிச்சி தூக்கு பாடலில் துனக் துனக் துனக் தின்னா தின்னா வரிகளை சேர்த்ததற்கு காரணம் இப்பாடல் முழுவதும் மும்பையில் நடைப்பெறுவதாக காட்சியமைக்கப்பட்டுள்ளதாம்.

அதே போல் தற்போது பயங்கர வேகமாக பிரபலமாகி வரும் கண்ணான கண்ணே பாடலுக்கு பதிலாக முதலில் வேறொரு பாடல் தான் காட்சியமைக்கப்பட்டதாம்.