Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பேட்ட டிரைலரில் ரஜினியிடம் முக்கியமான இந்த விஷயத்தை கவனித்தீர்களா? கதாபாத்திரம் இதுதானா

ரஜினியின் நடிப்பில் உருவெடுத்துள்ள பேட்ட படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வர உள்ளது. இசை வெளியீட்டு விழாவை தொடர்ந்து இதன் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த டிரைலரை பார்க்கும்போதே பாதி படத்தின் கதை தெரிந்துவிடுகிறது. மேகா ஆகாஷ் தான் படத்தின் முக்கியமான கதாபாத்திரம் என்பதும் அவரை காப்பாற்றும் பணியில் தான் ரஜினி வார்டனாக பணியாற்றுகிறார் என்பதும் தெளிவாக தெரிகிறது.

மேலும் ஒரு காட்சியில் ரஜினியின் கையில், மிசா 109 என பச்சை குத்தியிருப்பதால், 1975-77 காலக்கட்டத்தில் இந்திரா காந்தியால் உண்டாக்கப்பட்ட மிசா சட்டத்தை இது குறிப்பிடுகிறது. இதனால் ரஜினி இப்படத்தில் மிசா சட்டத்தால் ஜெயிலுக்கு சென்றவர் என்பதும் அவரது கைதி எண் 109 என்பதும் தெரிகிறது.