கோலிவுட்டில் கால் பதிக்கும் அம்பானி, முதல் படம் எந்த நடிகருடன் தெரியுமா? பிரமாண்டம் ஆரம்பம்
திரைப்படம் by Tony
அம்பானி பிரதர்ஸ் இந்தியாவில் கால் பதிக்காத இடமே இல்லை போல. தற்போது சினிமாவிலும் கால் பதிக்க ரெடியாகி வருகின்றனர்.
ஆம், ஏற்கனவே ஒரு சில பாலிவுட் படங்களை தயாரித்து வந்த இவர்கள் தற்போது கோலிவுட்டிலும் கால் பதிக்கவுள்ளனர்.
முகேஷ் அம்பானி ஜியோ ஸ்டுடியோ என்பதை கோலிவுட்டிற்கு கொண்டு வரப்போகிறாராம்.
இந்த தயாரிப்பின் கீழ் முதல் படத்தை சிவகார்த்திகேயன் இணைந்து தயாரிக்கவுள்ளதாக முன்னணி பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.
சிவகார்த்திகேயன் மட்டுமின்றி விஜய் சேதுபதி நடிக்கும் படத்தையும் இந்நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம்.