Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்தியன் 2 படத்திற்கு பிறகு பாலிவுட் நடிகரை இயக்கும் ஷங்கர்- யாரு தெரியுமா?

நடிகர் கமல்ஹாசன் திரைப்பயணத்தில் யாராலும் மறக்க முடியாத நிறைய படங்கள் உள்ளது. அதில் ஒன்று இந்தியன், இப்படம் ஏற்படுத்திய தாக்கம் பெரியது.

இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக இருக்கிறது, படப்பிடிப்பு கூட இம்மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது, பின் படத்திற்கு இசை அனிருத் தான்.

இந்த பட செய்தி வந்ததில் இருந்து பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார் என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

ஷங்கர் இப்படத்தை தொடர்ந்து பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனை வைத்து ஒரு Sci-Fi படம் இயக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.