Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வி சென்டிமெண்ட்டை தாண்டி 4 படங்களிலும் அஜித்-சிவா கடைபிடித்துள்ள ஒரு விஷயம்- செம பிளான்

அஜித்தின் விஸ்வாசம் படம் பாக்ஸ் ஆபிஸில் எவ்வளவு வசூல் செய்யும் என்று இப்போதே பெரிய கணிப்பில் ரசிகர்கள் உள்ளார்கள்.

எங்கு எடுத்தாலும் விஸ்வாசம் படத்திற்கு நல்ல ஆரம்பம் உள்ளது, டிக்கெட் புக்கிங் எல்லாம் அப்படி விலைபோகிறது என திரையரங்க உரிமையாளர்கள் தகவல்கள் வெளியிட்ட வண்ணம் உள்ளனர்.

அதேசமயம் அஜித்தும் விஸ்வாசம் முழு படத்தை பார்த்துவிட்டு நாம் செய்த 4 படங்களில் இதுதான் பெஸ்ட் என்று மனதார பாராட்டிவிட்டாராம்.

சிவா வி சென்டிமெண்டை தாண்டி 4 படங்களிலும் ரன்னிங் டைம் ஒரு சில நிமிடங்களே வித்தியாசத்தில் எடுத்துள்ளார். மிகவும் தெளிவாக பிளான்கள் செய்து படங்கள் இயக்கியுள்ளார் என்பது மட்டும் இதைப்பார்த்தால் தெரிகிறது.

  • வீரம்- 156 நிமிடங்கள் (2 மணி நேரம் 36 நிமிடங்கள்)
  • வேதாளம்- 154 நிமிடங்கள் (2 மணி நேரம் 34 நிமிடங்கள்)
  • விவேகம்- 157 நிமிடங்கள் (2 மணி நேரம் 37 நிமிடங்கள்)
  • விஸ்வாசம்- 152 நிமிடங்கள் (2 மணி நேரம் 32 நிமிடங்கள்)