Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவாவே இதை நான் தான் எடுத்தேனா என்று பார்த்து மெர்சலாகி போன காட்சி இதுதான்! அவரே சொன்ன தகவல்

அஜித்தின் விஸ்வாசம் படம் வரும் 10ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் சிவா பேட்டி ஒன்றினை கொடுத்தார். அதில் நீங்களே இப்படத்தில் பார்த்து மெய்சிலிர்த்து போன காட்சி எதாவது இருக்கிறதா என கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த சிவா, அஜித் சார் ஜீப் ஒன்றில் இருந்து இறங்கி வருவார். அதற்கு இமான் சார் ஒரு தீம் மியுசிக்கை போட்டிருப்பார். அந்த காட்சியை படம் முழுவதும் எடுத்த பிறகு பார்த்தேன். உண்மையில் இதை நான் தான் எடுத்தேனா என தோன்றியது, இதைவிட வேறு என்ன வேண்டும்.

அந்த காட்சியை அவ்வளவு அருமைப்படுத்தியதற்கு அஜித் சாருக்கும் இமான் சாருக்கும் நான் ரொம்ப நன்றிகடன் பட்டிருக்கிறேன் என்றார்.