Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசம் படம் பார்க்க பணம் தராத தந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்த மகன்- சோக சம்பவம்

அஜித்தின் விஸ்வாசம் படம் இன்று கோலாகலமாக வெளியாகிவிட்டது. ஒரு வருடமாக அஜித்தை திரையில் பார்க்க முடியாத சோகத்தை இன்று ரசிகர்கள் போக்கிவிட்டனர்.

படமும் குடும்பத்துடன் எல்லோரும் சேர்ந்து பார்க்கலாம் U சான்றிதழ் கொடுத்ததற்கு சரியான படம் என்று ரசிகர்கள் விமர்சனம் கொடுத்து வருகின்றனர். இந்த நேரத்தில் ஒரு சோகமான தகவல் வந்துள்ளது.

அதாவது, காட்பாடி கிழிஞ்சூரில் விஸ்வாசம் படம் பார்க்க பணம் தராததால் பாண்டியன் என்பவரை அவரது மகன் அஜித்குமார் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்.

தூங்கிக்கொண்டிருந்த போது பெட்ரோல் ஊற்றி எரித்ததில் படுகாயம் அடைந்த பாண்டியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் நிலை கொஞ்சம் மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது.