Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசம் கொண்டாட்டத்தை பார்த்து மிரண்டு போன தயாரிப்பாளர் போனி கபூர்- தல பற்றி என்ன கூறினார் தெரியுமா?

அஜித்தின் விஸ்வாசம் படத்தை ரசிகர்கள் படு மாஸாக வரவேற்று விட்டார்கள். எங்கு திரும்பினாலும் விஸ்வாசம் படம் பற்றிய பேச்சு தான்.

கட்அவுட், பேனர், பால் அபிஷேகம், வெடி, பட்டாசுகள் என விஸ்வாசம் கொண்டாட்ட வீடியோக்கள் அனைத்திலும் இதுதான். இப்படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து முதன்முதலாக பார்த்துள்ளார் தலயின் 59வது பட தயாரிப்பாளர் போனி கபூர்.

இந்த கொண்டாட்டங்களை பார்த்த அவர் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில்,நான் இதுபோல் ஒரு கொண்டாட்டத்தை திரையரங்கில் பார்த்ததே இல்லை, பெரிய திருவிழா போல் உள்ளது. இது எனக்கு பிரம்மிப்பாக இருக்கிறது, தலயை ரசிகர்கள் எப்படி கொண்டாடுகிறார்கள், அஜித்தை திரையரங்கில் பார்க்கவே ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள் என்று வியந்து பேசியுள்ளார்.

அதோடு Pink ரீமேக் எனது மனைவியின் விருப்பம், அதற்கு அஜித்தும் ஒப்புக் கொண்டார். நாங்கள் இருவரும் மறைந்த ஸ்ரீதேவியின் ஆசையை நிறைவேற்றுவதில் சந்தோஷம் என பேசியுள்ளார்.