Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பேட்ட, விஸ்வாசத்தை நேரடியாக தாக்கி போஸ்டரை வெளியிட்டிருக்கும் பிரபலம்!

இன்று அஜித்தின் விஸ்வாசமும் ரஜினியின் பேட்டயும் வெளியாகி தமிழகத்தையே திருவிழா போல் மாற்றியுள்ளது. இந்நிலையில் இவ்விரு படங்களையும் சீண்டுவது போல, என் பேட்டையில எவனும் விஸ்வாசமா இல்ல நீ மட்டும் ஏன் என்ற வாசகங்களுடன் தற்போது போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் நாயகன் வேறு யாரும் இல்லை, ரஜினியின் போட்டியாளரான கமலின் சகோதரர் சாருஹாசன் தான். அவரின் நடிப்பில் வரும் 26ஆம் தேதி வெளியாக உள்ள தாதா 87 படத்தின் போஸ்டர் தான் இது.

இந்த படத்தின் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜாவும் முக்கிய வேடத்தில் காமெடி நடிகர் ஜனகராஜும் நடித்துள்ளனர். இந்த போஸ்டரினால் படம் நன்றாக விளம்பரமாகியுள்ளது.