Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியின் பேட்ட அதற்குள் 1 மில்லியன் டாலர் வசூல்! இந்த ஒரு நாட்டிலேயே இவ்வளவா

ரஜினியின் பேட்ட படம் பலத்த எதிர்ப்பார்ப்புகிடையே கடந்த 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. அதிலும் அமெரிக்கா போன்ற சில நாடுகளில் பிரிமியர் காட்சிகள் 9ஆம் தேதியே வெளியாகிவிட்டன.

அமெரிக்காவில் பிரிமியர் காட்சிகளால் மட்டும் 5,62,166 US டாலர்களை வசூலித்தது. அதனை தொடர்ந்து 10, 11 என மற்ற இரு நாட்களையும் சேர்த்து இதுவரை மட்டுமே அங்கு பேட்ட படம் 1 மில்லியன் டாலர்களை கடந்துவிட்டதாம்.

மேலும் அமெரிக்காவில் ரஜினியின் படங்களிலேயே 2.0 தான் 4.9 மில்லியன் டாலர்களை பெற்று முதலிடத்தில் உள்ளது. அதனை பேட்ட முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.