Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பேட்ட படத்தில் இருந்து இத்தனை நிமிட காட்சிகள் நீக்கப்பட உள்ளதா?

கடந்த 10ஆம் தேதி அஜித்தின் விஸ்வாசத்திற்கு போட்டியாக ரஜினியின் பேட்ட படமும் வெளியானது. பேட்ட படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார்.

ரஜினியுடன் விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா போன்றோரும் நடித்திருந்த இப்படத்தை பார்த்துவிட்டு வந்த பலரின் கருத்தாக அதிகபடியான படத்தின் காட்சி நீளம் இருந்தது. இதனால் பலரும் இரண்டாம் பாதியில் போரடிப்பதாக கூறியிருந்தனர்.

இதனால் படத்தில் இருந்து 20 நிமிட காட்சிகள் நீக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இது எந்த பகுதியில் இருந்து நீக்கப்பட உள்ளன என்பது தெரியவில்லை.