Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பல வருடமாக படம் எடுப்பதை நிறுத்தியிருந்த AVM மீண்டும் வருகிறது, முன்னணி ஹீரோவுடன் கூட்டணி, யார் தெரியுமா?

தமிழ் சினிமாவின் இத்தனை ஆண்டு பயணத்தில் AVM நிறுவனத்தை யாராலும் மறக்க முடியாது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் தமிழ் சினிமாவின் இதயமே ஒரு காலத்தில் AVM-ஆக தான் இருந்து வந்தது.

சிவாஜி, அயன், வேட்டைக்காரன், திருப்பதி, ஜெமினி என பல வெற்றி படங்களை கொடுத்த இந்நிறுவனம் பல வருடமாக படங்களை தயாரிப்பதையே நிறுத்தியது.

இனி AVM நிறுவனம் எந்த ஒரு படத்தயாரிப்பிலும் ஈடுப்பட போவது இல்லை என்று தான் தகவல்கள் வந்தது.

ஆனால், தற்போது முன்னணி பத்திரிகையாளர் ஒருவர் கூறுகையில் AVM அடுத்து சூர்யாவுடன் கைக்கோர்க்கவுள்ளதாம், இப்படத்தை ஹரி இயக்கவுள்ளாராம்.