Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பேட்ட படப்பிடிப்பில் அனைவரையும் மிரட்டிய ரஜினி- ஆனால் எதற்கு பாருங்க

ரஜினியின் பேட்ட படம் நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்கள் கொண்டாடிய படமாக அமைந்துவிட்டது. சூப்பர் ஸ்டாரிடம் மிஸ் செய்த ஸ்டைல், காமெடி என அனைத்தையும் இப்படத்தில் மொத்தமாக கொண்டு வந்தார் கார்த்திக் சுப்புராஜ்.

படமும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்க கார்த்திக் சுப்புராஜ் மகிழ்ச்சியில் நிறைய பேட்டிகள் கொடுத்து வருகிறார். அதில் ஒன்றில் படத்தில் ஒரு காட்சியில், நுன்சக்கு சண்டைக்காட்சி வைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். நுன்சாக்கு என்றாலே புரூஸ்லீ தான் நியாபகம் வருவார், நாம் செய்தால் சூப்பராக இருக்க வேண்டும் என்றார்.

பீட்டர் ஹெயின் மாஸ்டரும் இதேதான் சொன்னார், வேறு ஏதாவது பொருள் பயன்படுத்தலாமா என்று கேட்டார், கடைசி வரைக்கும் நான் இதுதான் சரி என்றேன்.

பின்னர் ஷுட் செய்யும் போது தான் தெரிஞ்சது ரஜினி அவர்கள் அதை பயிற்சி செய்துள்ளார் என்று, அவர் செய்ததும் செட்டில் இருக்கும் அனைவரும் கை தட்டினோம். எங்களை பார்த்த அவர் ஒன்மோர் மட்டும் எவனாவது கேட்டீங்க என்று சூப்பர் ஸ்டார் சொன்னதாக கார்த்தி தெரிவித்துள்ளார்.